உள்ளாட்சி தேர்தல் தவிர்த்து இப்போது நம்மூர் செய்திகளில் மிகவும் அடிபடும் விஷயம் கூடங்குளம்.
அணு மின் நிலையம் வரமா சாபமா?
இன்றைய தேதியில் வாழ்வியலுக்கு மிக முக்கியமான ஆதாரம் மின்சாரம். மேட்டூரில் உற்பத்தி ஆகும் மின்சாரம் நமது கொள்முதலுக்கு போதுமானதாக இல்லை.
பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து வரும் வேலை வாய்ப்புகளும், வருமானமும்; அதன் மூலம் மேலும் உருவாகுகின்ற வேலை வாய்ப்புகளும் நம் பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது. இந்நிறுவனங்கள் இயங்கவும் மேலும் மின்சாரம் தேவை படுகின்றது.
வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. மின் விசிறி இல்லாத குடும்பங்கள் இன்று எத்தனை? தொலைக்காட்சி இல்லாத குடும்பங்கள் எத்தனை?
உணவுக்கும், உடைக்கும் அடுத்து இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை மின்சாரம் என்றால் அது மிகையாகாது.
இவ்வளவு தேவைகளை வைத்து கொண்டு அணுமின் நிலையம் வேண்டாம் என்றால் அதில் என்ன நியாயம் இருக்கிறது.
முக்கால் வாசி கட்டி முடிக்கும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
முன்கூட்டியே வேண்டாம் என்று சொல்லி இருந்தால் வேறு மாநிலத்திற்கு இந்த திட்டத்தை கொடுத்திருப்பார்கள் அல்லவா? நமக்கும், அண்டை மாநிலங்களிடம் பிச்சை எடுக்க மற்றுமொரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.
மேலும், இந்நிறுவனம் வருவதனால் அந்த பகுதியில் உள்ள வேலை வாய்புகள் பெருகும். நம் மாநிலம் தன்னிறைவு அடையும். தென் மாவட்டங்களில் உள்ள வறட்சிக்கு ஒரு வடிகால் அமையும்.
எல்லா வளர்சிகளிலுமே கேடு இருக்கிறது. வளர்ச்சி வேண்டாம் என்று சொல்கிறோமா? சுற்று சூழல் மாசுபடும் - நான் இனி இரு சக்கர வாகனங்களில் செல்ல மாட்டேன் என்று சொல்கிறோமா? மரங்களை வெட்டி வீடு கட்ட மாட்டோம் என்கிறோமா? பேப்பர் வேண்டாம், மரங்கள் அளிக்கப்படுகின்றன என்கிறோமா? திருப்பூரில் இருந்து வரும் துணி வேண்டாம் என்கிறோமா?
கோடையில் மின்சாரம் தடை படும்போது ஏன் அரசாங்கத்தை குறை கூறுகிறோம்?
திடீர் என்று எங்கிருந்து வந்தது இந்த கூடன்குள எதிர்ப்பு? ஏன்?
சுற்று சூழல் மாசு படுவதும், மனித உயிர்க்கு ஆபத்து இருப்பதும், கவனிக்கத்தக்க, சங்கடப்பட்ட வேண்டிய விஷயம் தான். அதற்கான நெருக்கடி கையாள்கை முறைகளையும், திட்டங்களையும் கொண்டு வர வேண்டும்.
கூழும் வேண்டும், மீசையும் வேண்டும் என்னும் கதையாக அல்லவா உள்ளது. மழை வந்தால் வெள்ளம் வருகிறது; உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படுகிறது என்பதற்காக மழையே வேண்டாம் என்று சொல்வது போல் உள்ளது போராட்டகார்களின் வாதம்.
வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவற்றிலும் அணுமின் தயாரிக்கபடுவதில்லையா?
அவர்களால் எப்படி இதுபோன்ற பிரச்சனைகளை சமாளிக்க முடிகிறது. அல்லது, அந்நாடுகளில் உள்ள மக்களுக்கு அறிவு இல்லையா?

சிந்திப்போமாக!!
அரசியல்வாதிகளே, மக்கள் அன்றாட தேவைகளில் அரசியல் செய்யாதீர்கள்.
No comments:
Post a Comment