Sunday, 16 October 2011

கூடங்குளம் - கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை

உள்ளாட்சி தேர்தல் தவிர்த்து இப்போது  நம்மூர் செய்திகளில் மிகவும் அடிபடும் விஷயம் கூடங்குளம். 
அணு மின் நிலையம் வரமா சாபமா?

இன்றைய தேதியில் வாழ்வியலுக்கு மிக முக்கியமான ஆதாரம் மின்சாரம். மேட்டூரில் உற்பத்தி ஆகும் மின்சாரம் நமது கொள்முதலுக்கு போதுமானதாக இல்லை.
பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து வரும் வேலை வாய்ப்புகளும், வருமானமும்; அதன் மூலம் மேலும் உருவாகுகின்ற வேலை வாய்ப்புகளும் நம் பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது. இந்நிறுவனங்கள் இயங்கவும் மேலும் மின்சாரம் தேவை படுகின்றது. 
வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. மின் விசிறி இல்லாத குடும்பங்கள் இன்று எத்தனை? தொலைக்காட்சி இல்லாத குடும்பங்கள் எத்தனை?

உணவுக்கும், உடைக்கும் அடுத்து இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை மின்சாரம் என்றால் அது மிகையாகாது.
இவ்வளவு தேவைகளை வைத்து கொண்டு அணுமின் நிலையம் வேண்டாம் என்றால் அதில் என்ன நியாயம் இருக்கிறது. 

முக்கால் வாசி கட்டி முடிக்கும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? 
முன்கூட்டியே வேண்டாம் என்று சொல்லி இருந்தால் வேறு மாநிலத்திற்கு இந்த திட்டத்தை கொடுத்திருப்பார்கள் அல்லவா? நமக்கும், அண்டை மாநிலங்களிடம் பிச்சை எடுக்க மற்றுமொரு வாய்ப்பு கிடைத்திருக்கும். 

மேலும், இந்நிறுவனம் வருவதனால் அந்த பகுதியில் உள்ள வேலை வாய்புகள் பெருகும். நம் மாநிலம் தன்னிறைவு அடையும். தென் மாவட்டங்களில் உள்ள வறட்சிக்கு ஒரு வடிகால் அமையும்.

எல்லா வளர்சிகளிலுமே கேடு இருக்கிறது. வளர்ச்சி வேண்டாம் என்று சொல்கிறோமா? சுற்று சூழல் மாசுபடும் - நான் இனி இரு சக்கர வாகனங்களில் செல்ல மாட்டேன் என்று சொல்கிறோமா? மரங்களை வெட்டி வீடு கட்ட மாட்டோம் என்கிறோமா? பேப்பர் வேண்டாம், மரங்கள் அளிக்கப்படுகின்றன என்கிறோமா? திருப்பூரில் இருந்து வரும் துணி வேண்டாம் என்கிறோமா?

கோடையில் மின்சாரம் தடை படும்போது ஏன் அரசாங்கத்தை குறை கூறுகிறோம்? 


திடீர் என்று எங்கிருந்து வந்தது இந்த கூடன்குள எதிர்ப்பு? ஏன்?
சுற்று சூழல் மாசு படுவதும், மனித உயிர்க்கு ஆபத்து இருப்பதும், கவனிக்கத்தக்க, சங்கடப்பட்ட வேண்டிய விஷயம் தான். அதற்கான நெருக்கடி கையாள்கை முறைகளையும், திட்டங்களையும் கொண்டு வர வேண்டும்.
கூழும் வேண்டும், மீசையும் வேண்டும் என்னும் கதையாக அல்லவா உள்ளது. மழை வந்தால் வெள்ளம் வருகிறது; உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படுகிறது என்பதற்காக மழையே வேண்டாம் என்று சொல்வது போல் உள்ளது போராட்டகார்களின் வாதம்.

வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவற்றிலும் அணுமின் தயாரிக்கபடுவதில்லையா?
அவர்களால் எப்படி இதுபோன்ற பிரச்சனைகளை சமாளிக்க முடிகிறது. அல்லது, அந்நாடுகளில் உள்ள மக்களுக்கு அறிவு இல்லையா?


சிந்திப்போமாக!!
அரசியல்வாதிகளே, மக்கள் அன்றாட தேவைகளில் அரசியல் செய்யாதீர்கள்.

Monday, 19 September 2011

வந்தாச்சி தேர்தல்!!

உள்ளாட்சி தேர்தலும் வந்து விட்டது. இப்போது உள்ள திமுக-விற்கு எதிரான அலையை பயன்படுத்த முனைகிறார் அம்மையார்.
இந்த தேர்தலில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது தமிழ் நாட்டில் உள்ள ஐந்து வயது பொடியனும் சொல்லி விடுவான். மேலும், திமுக மேல் உள்ள வெறுப்பில் இருந்து நாம் வெளியே வரவில்லை. 

ஆனால் இந்த தேர்தல் சில சுவாரசியமான விசயங்களை கொணர்ந்து உள்ளது.
  • திமுக, அதிமுக, மதிமுக, கூட்டணி இல்லாமல் போட்டி இடும் என எதிர்பார்க்கலாம். 
  • தேமுதிக கம்யுனிஸ்ட்-களுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருகிறது. அவர்களும் தனியாக போட்டியிட்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். (தயவு செய்து காங்கிரசிடம் விலை போய் விடாதிர்கள்.) இந்த கழகங்களில்  யார் எவ்வளவு பலம் வாய்ந்தவர்கள் என்பதனை அறிய ஒரு வாய்ப்பாக இருக்கும்.
  • மேலும், காங்கிரஸ் தமிழகத்தில் அடியோடு ஒழியும் நேரம் வந்துவிட்டது. இத்தனை நாள் கழகங்களின் புண்ணியத்தாலும், உண்ட வீதிக்கு ரெண்டகம் செய்பவர்களாலும் (வேறென்ன சொல்வது - கன்னியாகுமரி-யிலும், ஹோசுரிலும் உள்ள வேறு மொழி பேசும் சகோதரர்களை. அங்கு மட்டும் காங்கிரஸ் ஜெயிக்கிறது) காங்கிரஸ் அரசியல் நடத்தியது. இனி சமாதி கட்டும் நேரம் வந்து விட்டது.
  • சாதி கட்சிகளும் தனியாக போட்டியிடும் நிலையில் உள்ளன. அவர்களும் இந்த தேர்தல் சரியான பாடம் கற்பார்கள்.
  • அப்புறம் BJP - என்ன சொல்வதென்றே தெரிய வில்லை.
என்னதான் அம்மையார் வலுவாக இருந்தாலும், ஆட்சி பொறுப்பேற்று நான்கு மாதங்களில் அவர் சறுக்கிய படிகள், மக்களிடம் மதிப்பை இழந்த தருணங்கள் - 
  • தலைமை செயலகத்தை தடாலடியாக மாற்றியது. (திமுக கட்டியது என்ற ஒரே காரணத்திற்காக)
  • சமச்சீர் கல்வி திட்டத்தில் மாணவர்களை அலைகளித்தது. (திமுக கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக)
  • பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்தது.
  • திமுக வினரை தடாலடியாக கைது செய்வது. 
இந்த தேர்தலில் நமக்கு தேவை "மாற்றம்". முதுகொடிந்த திமுக-விடமும், ஆதிக்க அடாவடி அதிமுக விடமும் இருந்து "விடுதலை". 
மதிமுக, தேமுதிக ஒன்றிற்கு நாம் வாக்களிக்கலாம் (ஒரு வேலை தேமுதிக காங்கிரசிடம் விலை போகாமல் இருந்தால்)
தன்மானம் காப்பார்களா தமிழர்கள் !!

Wednesday, 13 April 2011

கடைமையை செப்பனே செய்த அஜித்துக்கு ஒரு சொட்டு


முதலில், நான் ஒரு அஜித் ரசிகன் இல்லை. ஆரம்ப காலத்தில் அவர் நடித்த காதல் மையமான படங்களையோ அல்லது அவர் இன்று நடிக்கும் ஆக்சன் படங்களையோ தீவிரமாக ரசிக்கும் வகையறா அல்ல நான். அதற்காக, நான் விஜய் ரசிகன் என முத்திரை குத்த வேண்டாம். எனக்கு விஜயும், அஜித்தும் நடிகனாக ஒன்று தான். 

அஜித் இன்று பொதுமக்களோடு வரிசையில் நின்று ஒட்டு போட்டது பாராட்டத்தக்க செயலாக கருதுகிறேன். 
பலர் இதனை வேறு மாதிரி சொல்லலாம்.

  • அஜித், வருங்கால அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் போடுகிறார்.
  • படங்கள் சரியாக இல்லை. விளம்பரம் தேடுகிறார்.
எது எப்படி இருப்பினும் (மேற்கூறிய காரணங்களில் ஒன்று உண்மையாக இருப்பினும் கூட), ஒரு உதாரண குடிமகனாக பொது மக்களோடு வரிசையில்  நின்று அவர் வாக்களித்தது பாராட்டத்தக்கது.


வேறு நடிகர்களும் வாக்களித்து இருக்கிறார்கள். அனால் யாரும் பொது மக்களோடு வரிசையில் நின்று வாக்களிததைபோல் செய்தி இல்லை.

சில தலைவர்களும், நடிகர்களும், ஒரு பெரும்படையுடன் சென்று, அங்கு ஒரு பெரிய காட்சி நடத்தி, விளம்பரம் செய்யும் வேலையில் அவர் காத்திருந்து வாக்களித்த விதம் ஒரு சிறந்த முன்னுதாரணம்.

தலை வணங்குகிறோம் அஜித்.
  

Sunday, 10 April 2011

'பயணம்' படமும், காஷ்மீர் கதையும்

 ராதா மோகன், பிரகாஷ் ராஜ் கூட்டணியின் மற்றுமொரு நல்ல படைப்பு 'பயணம்'.
ஒரு சினிமாவானது முழுக்க முழுக்க நடப்பு வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் எடுப்பது என்பது மிக கடினம். அந்த வகையில் இந்த சினிமாவிலும் சில பிசகுகள் உண்டு. அவற்றை ஒரு ரசிகனுக்கே உரிய தொனியில் நான்/நாம் ரசித்தோம்.
ஆனால், அந்த படத்தில் சொல்லப்படும் ஒரு கருத்து மிக தவறானது. "பாபர் மசூதியை இடிக்கும் முன், நம் நாட்டில் தீவிரவாத தொல்லை இல்லை" என்பதே.
பாபர் மசூதி இடிப்பு தேவை இல்லாத சில பிரச்சினைகளை நம் நாட்டிற்க்கு கொண்டு வந்துது என்பது உண்மையே. இந்து மதம், புத்த மதம், ஜைன மதம், இஸ்லாம் என நம் நாட்டில் வேறு வேறு மதங்கள் ஆட்சி செய்தன. ஒவ்வொரு அரசரும் தாங்கள் பின் பற்றும் மதத்திர்கேற்ப ஆலயங்கள் அமைத்தனர். பல ஆலயங்கள் இன்னொரு மத ஆலயத்தை இடித்தே கட்டப்பட்டது. 
இவ்வாறு இருக்க பாபர் மசூதியை இடித்த செயல் இத்தொழில்நுட்ப காலத்தில் தேவையற்றது. நம் நாட்டிற்கு அவப்பெயர் வாங்கி தந்ததுடன், நாட்டில் இருந்த ஒரே வலிமையான எதிர் கட்சி வலுவிழக்க காரணமாகவும் அமைந்தது.

நம் நாட்டில் தீவிரவாதம் தலை தூக்கியதற்கு இது தான் கராணமா? இல்லல்ல்ல்லை 
எப்போது பண்டிட் நேரு அவர்கள் பிரித்தானியரின் முன்னிலையில் காங்கிரசும், முஸ்லிம் லீக்-உம் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறி, முஸ்லிம்கள் அதிகம் வாழும் காஷ்மீரத்தை இந்தியாவுடன் இணைத்து கொண்டாரோ, அன்று இந்தியாவிற்குள் நுழைந்ததுதான் இந்த தீவிரவாதம்.

நேரு, காஷ்மீரத்து இந்து பண்டிட் ஆவர். அவர் தன் தாயகமான காஷ்மீர் பாகிஸ்தானிடம் செல்வதை விரும்ப வில்லை. இந்துக்கள் அதிகம் வாழும் பகுதி-யான ஜம்மு-வை மட்டும் இந்தியாவுடன் இணைத்துவிட்டு, காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்திருந்தால், நம் நாட்டில் தீவிரவாதம் உள் நுழைந்திருக்காது.
என், இன்றும் பாதி காஷ்மீர் இந்தியாவிடம் இல்லை.  இன்றும்,  காஷ்மீர் மக்கள் இந்திய ஆட்சியை பிடிக்காமல் மாதமொருமுறை போராடுகிறார்கள். வேறு நாடுகளும், காஷ்மீரை இந்தியாவின் அங்கமாக அங்கீகரிக்காமல் இந்தியாவால் ஆளப்படும் கஷ்மிராகதான் () சொல்கிறார்கள். அதுவும் உண்மையே. IPC - அதாவது, இந்திய சட்டம் காஷ்மீரில் செல்லாது. இந்த வறட்டு கவ்ரவதிர்காக நாம் இழந்தது என்ன - ஏராளமான வீரர்கள், பொருள் வளம், ஈழம் (ஈழம் விடுதலை பெற்றால் காஷ்மீர் விடுதலை கோரும் என்பதே காங்கிரசார் ஈழத்திற்கான தங்கள் என்னத்தை மாற்றி கொள்ள காரணம்)
நேரு-வின் ஒரு குடும்பத்திற்காக எவ்வளவு சண்டைகள், சச்சரவுகள்? இழப்புகள் தான் எவ்வளவு? 
 நாம் என்று இதை உணர்வோம். சிந்தியுங்கள். ஏப்ரல் 13 -இல் உங்கள் கருத்தை தெரிவியுங்கள். 

ராதா மோகன் தன் தனிப்பட்ட அல்லது திணிக்க பட்ட கருத்தை படத்தில் கூறி இருக்கிறார். ராதா மோகன் அவர்களே, ஒரு நல்ல படத்தில் பொய்-பிரச்சாரம் அவசியம் தானா??

Tuesday, 5 April 2011

கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்


கலைஞர் ஐயா, 

இருபத்தி எட்டு வருடங்களாக காத்து கிடந்த எங்களது கனவுகளை டோனி தலைமையிலான இந்திய அணி இன்று மெய்ப்படுத்தியுள்ளது.
இதற்காக ஒவ்வொரு இந்தியனும்,  ஒவ்வொரு இந்திய தமிழனும் பூரிப்பு அடைகிறோம். 
தாங்களும் எங்கள் மாநிலத்தின் தலைவராக, எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதயாக அந்த உணர்ச்சியை வெளிப்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். 
தாங்கள் சற்று மேலே பொய் 3 கோடி ரூபாய் பரிசும் அறிவித்திருக்கிறீர்கள்
ஒரு வேலை நமது ஹாக்கி அணி,  இதை போல ஒரு கோப்பை வென்றிருந்தால்,  உங்கள் அறிவிப்பு சற்று மகிழ்ச்சி அளிக்க கூடியதே.

ஆனால், இன்றைய கிரிக்கெட் அணியில் உள்ளோருக்கு, இந்த பணம் தேவை தான என்று சிந்தித்து பாருங்கள். அவர்கள்,  ஏற்கனவே போதுமான அளவு சம்பாதிகிரார்கள். இது நான் சொல்லி உங்களுக்கு தேய வேண்டியது இல்லை.  உலக கோப்பை வெற்றி மேலும் அவர்களுக்கு விளம்பரங்களையும்,  அதன் மூலம் பணத்தையும் தேடி தரும். 

இத்தறுவாயில், இந்த மூன்று கோடியை, வேறு மாதிரி நீங்கள் பயன்படுத்தலாம்.
1. ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கலாம். ஒரு வீடிற்கு இரண்டு லட்சம் செலவாகிறது என்று போட்டால் கூட, 150 வீடுகள் கடலாம்.
2. சில பள்ளிகூடங்களை சீர் செய்யலாம். 
3. சாலைகள் போடலாம் 

நீங்கள் Cricket-இல் தான் இந்த பணத்தை செலவு செய்ய வேண்டும் என்று இருந்தால் -
1. சில மாவட்ட தலை நகரங்களில் Cricket மைதான்கள் அமைல்கலாம். ஏன், அதற்க்கு கலைஞர் உலக கோப்பை 2011 மைதானம் என்ற பேர் கூட வைக்கலாம்.
2. அரசு பள்ளிகளுக்கு, Cricket உபகரணங்கள் வாங்கி தரலாம். Bat-டில் உங்கள் புண் முறுவல் முகத்துடன் தான்.
3. கிராம புறங்களில் இருந்து கிரிக்கெட் சிறப்பாக விளையாடுபவர்களுக்கு,  ஊக்க தொகையாக அளிக்கலாம். கலைஞர் ஊக்க தொகை என்று அறிவிக்கலாம். 

இப்படி எவளவோ இருக்க எங்கள் பணத்தை நீங்கள் எடுத்து சில பணக்காரர்களுக்கு தருவது, கொஞ்சம் கூட நல்லா இல்லை!!
அதுவும் நம் மாநிலத்திற்கு சுத்தமாக சம்பந்தம் இல்லாதவர்களுக்கு எங்கள் பணத்தை எடுத்து தருவது எந்த வகையில் நியாயம்?!
ராத்திரி பகலாக உழைத்து நாங்கள் கட்டும் வரியை இப்படி உங்கள் விருப்பத்திற்கு செலவு செய்யலாமா??
உங்கள் பேரப்பிள்ளைகளிடம் இருக்கும் 10,000 கோடியில், ஒரு மூணு கோடியை கொடுக்கலாமே. 
இல்லை,  நம்ம இந்திய அணிக்கு எதாவது செய்தே ஆக வேண்டும் என்றால்,  ரவிச்சந்திரன் அஷ்வின்-க்கு ஒரு 10 லட்சம் தரலாம் 

வருமான வரியின் முக்கிய நோக்கம் என்னவென்றால், மக்களிடையே உள்ள ஏற்ற தாழ்வுகளை கலைவதும், மக்களுக்கு பொதுவான வசதிகளை செய்து தருவதும் தான். உங்களின் இந்த செயல் எந்த வகையில் அடங்கும்.

கொடுமை என்னவென்றால்,  நீங்கள் மக்களின் பணத்தை விரயமாக்குவது இப்போது ஒரு பொருட்டே இல்லாமல் போய்விட்டது. எந்த ஒரு எதிர் கட்சியும் இதற்க்கு எதிர்ப்பு குரல் எழுப்ப வில்லை