Monday, 19 September 2011

வந்தாச்சி தேர்தல்!!

உள்ளாட்சி தேர்தலும் வந்து விட்டது. இப்போது உள்ள திமுக-விற்கு எதிரான அலையை பயன்படுத்த முனைகிறார் அம்மையார்.
இந்த தேர்தலில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது தமிழ் நாட்டில் உள்ள ஐந்து வயது பொடியனும் சொல்லி விடுவான். மேலும், திமுக மேல் உள்ள வெறுப்பில் இருந்து நாம் வெளியே வரவில்லை. 

ஆனால் இந்த தேர்தல் சில சுவாரசியமான விசயங்களை கொணர்ந்து உள்ளது.
  • திமுக, அதிமுக, மதிமுக, கூட்டணி இல்லாமல் போட்டி இடும் என எதிர்பார்க்கலாம். 
  • தேமுதிக கம்யுனிஸ்ட்-களுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருகிறது. அவர்களும் தனியாக போட்டியிட்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். (தயவு செய்து காங்கிரசிடம் விலை போய் விடாதிர்கள்.) இந்த கழகங்களில்  யார் எவ்வளவு பலம் வாய்ந்தவர்கள் என்பதனை அறிய ஒரு வாய்ப்பாக இருக்கும்.
  • மேலும், காங்கிரஸ் தமிழகத்தில் அடியோடு ஒழியும் நேரம் வந்துவிட்டது. இத்தனை நாள் கழகங்களின் புண்ணியத்தாலும், உண்ட வீதிக்கு ரெண்டகம் செய்பவர்களாலும் (வேறென்ன சொல்வது - கன்னியாகுமரி-யிலும், ஹோசுரிலும் உள்ள வேறு மொழி பேசும் சகோதரர்களை. அங்கு மட்டும் காங்கிரஸ் ஜெயிக்கிறது) காங்கிரஸ் அரசியல் நடத்தியது. இனி சமாதி கட்டும் நேரம் வந்து விட்டது.
  • சாதி கட்சிகளும் தனியாக போட்டியிடும் நிலையில் உள்ளன. அவர்களும் இந்த தேர்தல் சரியான பாடம் கற்பார்கள்.
  • அப்புறம் BJP - என்ன சொல்வதென்றே தெரிய வில்லை.
என்னதான் அம்மையார் வலுவாக இருந்தாலும், ஆட்சி பொறுப்பேற்று நான்கு மாதங்களில் அவர் சறுக்கிய படிகள், மக்களிடம் மதிப்பை இழந்த தருணங்கள் - 
  • தலைமை செயலகத்தை தடாலடியாக மாற்றியது. (திமுக கட்டியது என்ற ஒரே காரணத்திற்காக)
  • சமச்சீர் கல்வி திட்டத்தில் மாணவர்களை அலைகளித்தது. (திமுக கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக)
  • பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்தது.
  • திமுக வினரை தடாலடியாக கைது செய்வது. 
இந்த தேர்தலில் நமக்கு தேவை "மாற்றம்". முதுகொடிந்த திமுக-விடமும், ஆதிக்க அடாவடி அதிமுக விடமும் இருந்து "விடுதலை". 
மதிமுக, தேமுதிக ஒன்றிற்கு நாம் வாக்களிக்கலாம் (ஒரு வேலை தேமுதிக காங்கிரசிடம் விலை போகாமல் இருந்தால்)
தன்மானம் காப்பார்களா தமிழர்கள் !!